தமிழ்நாடு
பாஜக

சென்னையில் முதல் முறையாக 200 வார்டுகளிலும் போட்டியிட பா.ஜனதாவினர் அதிக ஆர்வம்

Published On 2022-01-17 06:30 GMT   |   Update On 2022-01-17 06:30 GMT
சென்னை மாநகராட்சியை பொறுத்த வரை 200 வார்டுகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து பலர் மனு செய்துள்ளனர். சராசரியாக ஒரு வார்டுக்கு 5 முதல் 8 பேர் மனு செய்துள்ளனர்.

சென்னை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி இந்த வார இறுதிக்குள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி பற்றியோ எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு இடங்கள் என்றோ இதுவரை அறிவிக்கப்பட வில்லை.

இந்த நிலையில் பா.ஜனதா சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியை பொறுத்த வரை 200 வார்டுகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து பலர் மனு செய்துள்ளனர். சராசரியாக ஒரு வார்டுக்கு 5 முதல் 8 பேர் மனு செய்துள்ளனர்.

அவர்களிடம் பொன்.ராதாகிஐஷ்ணன், கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், எம்.என்.ராஜா, வி.பி.துரைசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேர்காணல் நடத்தினார்கள்.

பா.ஜனதாவில் அனைத்து வார்டுகளிலும் போட்டியிட போட்டி போட்டு விருப்பம் தெரிவித்து இருப்பது இதுவே முதல் முறை. அதே போல் திராவிட கட்சிகளுக்கு இணையாக தேர்தலில் பணம் செலவழிக்கவும் ஒரு சிலர் தயார் என்று கூறி இருப்பதும் பா.ஜனதா நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News