தமிழ்நாடு செய்திகள்
புவனகிரி பகுதியில் தரமற்ற தார்சாலை - பொதுமக்கள் சாலை மறியல்
புவனகிரி பேரூராட்சிக்குட்பட்ட சின்னக்கடை தெரு, மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் தரமற்ற சாலை அமைத்ததாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புவனகிரி:
புவனகிரி பேரூராட்சிக்குட்பட்ட சின்னக்கடை தெரு, மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 99 லட்சம் மதிப்பில் தார்சாலை போடப்பட்டது.
தார்சாலை போட்டு சில தினங்களுக்கு உள்ளே பெயர்ந்து விட்டது என்று அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் இதுநாள் வரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் இன்று காலை திடீர் என்று பெருமத்தூர் பஸ் நிலையம் அருகில் சிதம்பரம் விருத்தாசலம் சாலையில் சாலை மறியல் செய்தனர்.
இதனை அறிந்த பேரூராட்சி நிர்வாகம் மற்றும் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதியை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதற்கு உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் அடிப்படையில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.