தமிழ்நாடு
பெரிய தக்காளி

மளிகை கடைக்கு விற்பனைக்கு வந்த பெரிய தக்காளி

Update: 2021-12-15 06:59 GMT
ஒரு தக்காளி 300 கிராம் எடையில் மிகப்பெரிய அளவில் பூசணிக்காய் போல் தோற்றமளித்தது. அங்கு காய்கறிகளை வாங்க வந்த வாடிக்கையாளர்கள் ஆச்சரியாகமாக அந்த தக்காளியை பார்த்து வியந்து செல்கின்றனர்.

சங்ககிரி:

சேலம் மாவட்டம் சங்ககிரி - திருச்செங்கோடு பிரிவு சாலையில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் ராபர்ட், (வயது 40). இவர் பவானி, குமாரபாளையம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் காய்கறிகளை வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறார். நேற்று அவர் வழக்கம்போல் பவானியில் இருந்து விற்பனைக்காக தக்காளிகளை வாங்கி வந்தார். அதில் ஒரு தக்காளி 300 கிராம் எடையில் மிகப்பெரிய அளவில் பூசணிக்காய் போல் தோற்றமளித்தது. அந்த அதிசய தக்காளியை ராபர்ட் விற்பனை செய்யாமல் கடை முன்பு வைத்து இருந்தார். அங்கு காய்கறிகளை வாங்க வந்த வாடிக்கையாளர்கள் ஆச்சரியாகமாக அந்த தக்காளியை பார்த்து வியந்து செல்கின்றனர். 

Tags:    

Similar News