செய்திகள்
4-வது நாளாக கேரளாவுக்கு உபரி நீர் திறப்பு: முல்லைப்பெரியாறு அணையில் மத்திய துணைக்குழு ஆய்வு
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இன்று 4-வது நாளாக கேரளாவுக்கு உபரிநீர் வீணாக திறக்கப்படும் நிலையில் மத்திய துணைக்குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கூடலூர்:
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும், தேனி மாவட்டத்திலும் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த 5 நாட்களுக்கு முன்பு 138 அடியை எட்டியது.
அதன் பிறகு விரைவில் 142 அடியை எட்டும் என எதிர்பார்த்திருந்த நிலையில் கேரள நீர் பாசனத்துறை அமைச்சர் மற்றும் அம்மாநில அதிகாரிகள் அணையில் ஷட்டர் பகுதியை திறந்து விட்டு வீணாக தண்ணீரை வெளியேற்றினர். 517 கன அடியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று 4-வது நாளாக 2348 கன அடி வீதம் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மின் உற்பத்தி செய்த பிறகு வீணாக கடலில் கலந்து வருகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை 138.20 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3952 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 2305 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதில் 550 கன அடி தண்ணீர் இறைச்சல் பாலம் வழியாகவும் 1755 கன அடி தண்ணீர் மின் உற்பத்திக்கும் செல்கிறது. நீர் இருப்பு 6672 மி.கன அடியாக உள்ளது.
கூடுதல் தண்ணீர் திறப்பு காரணமாக 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 62.20 அடியாக உள்ளது. நீர்வரத்து 1940 கன அடி. திறப்பு 1369 கன அடி. இருப்பு 4036 மி.கன அடியாக உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரும் சமயத்தில் மத்திய துணைக்குழு ஆய்வு செய்து அதனை மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளருக்கு அனுப்புவது வழக்கம். அதன்படி மத்திய துணைக்குழு இன்று பெரியாறு அணை பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில் தமிழக பிரதிநிதிகளாக பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக நீர் பாசன செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆகஸ்டு 17-ந் தேதி இக்குழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனர். தற்போது அணையின் நீர்மட்டம் 138 அடியை தாண்டியுள்ள நிலையில் குழுவின் ஆய்வு முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது. அணைக்கு வரும் நீர்வரத்து, கேரளா சார்பில் வெளியேற்றப்படும் நீரின் அளவு உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்காமல் கேரள அரசு தன்னிச்சையாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்த பிரச்சினை, அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்தும் தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட உள்ளது. இக்குழுவின் அறிக்கை மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான மூவர் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதாவது கேரள அரசின் செயல்பாட்டுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்...தொடர்மழை காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை