செய்திகள்
புலி

ஆட்கொல்லி புலிக்கு திடீர் உடல்நலக்குறைவு- மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு

Published On 2021-10-16 07:27 GMT   |   Update On 2021-10-16 07:34 GMT
புலியை தீவிரமாக கண்காணித்து வரும் வனத்துறையினர் கால்நடை டாக்டர்கள் உதவியுடன் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கூடலூர்:

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதி மக்களை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அச்சுறுத்தி வந்த டி23 என்ற புலியை நேற்று வனத்துறையினர் கூட்டுப்பாறா என்ற இடத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

புலியின் உடலில் 8 இடங்களில் காயங்கள் இருப்பதால் அதற்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். இதையடுத்து புலியை கூண்டில் அடைத்து லாரியில் ஏற்றி மைசூரில் உள்ள வன உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையே மைசூர் உயிரியல் பூங்காவிற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட ஆட்கொல்லி புலிக்கு சிகிச்சை அளிக்கும் பணியை டாக்டர்கள் குழுவினர் தொடங்கினர்.

இதுவரை மயக்கத்தில் இருந்த புலி இன்று காலை மயக்கத்தில் இருந்து தெளிந்து மிகவும் ஆக்ரோ‌ஷமாக காணப்பட்டது.

இந்த நிலையில் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள டி23 புலிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

கடந்த 18 நாட்களாக உணவு உண்ணாமல் இருந்துள்ளதாலும், உடலில் காயங்கள் இருப்பதால் மிகவும் சோர்வுடனேயே காணப்படுவதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து புலியை வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்கின்றனர். மேலும் கால்நடை டாக்டர்கள் உதவியுடன் புலிக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News