செய்திகள்
பவானிசாகர் அணை

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு

Published On 2021-09-23 04:06 GMT   |   Update On 2021-09-23 04:06 GMT
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 101.99 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2518 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
சத்தியமங்கலம்:

பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறந்து விடப்பட்ட ஒரு வார காலத்தில் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து பவானி சாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

வாய்க்கால் உடைப்பு சரிசெய்யும்பணி தீவிரமாக நடந்தது. இதையடுத்து கடந்த வாரம் முதல் மீண்டும் கீழ் பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. முதலில் வினாடிக்கு 200 கனஅடி திறக்கப்பட்டு வந்த நிலையில் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது.

இன்று காலை 6 மணியளவில் கீழ் பவானி வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீர் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து வாய்க்காலை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101.99 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2518 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 464 கனஅடியும், கீழ் பவானி வாய்க்காலுக்கு 2 ஆயிரம் கனஅடியும், பவானி ஆற்றில் 36 கனஅடியும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News