செய்திகள்
வாக்குப்பதிவை வலியுறுத்தி இளைஞர் செய்த சிலை.

திருவண்ணாமலையில் வாக்குப்பதிவை வலியுறுத்தி சிலை செய்த இளைஞர்

Published On 2021-03-17 16:13 IST   |   Update On 2021-03-17 16:13:00 IST
வாக்குப்பதிவை வலியுறுத்தி உருவாக்கிய சிலையை சிற்பி சுரேஷ் திருவண்ணாமலை அருங்காட்சியகத்தில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருந்தார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள தாழம்ஓடை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது37) சிற்பி. இவர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தும் வகையில் அடையாள மையிடும் ஒற்றை விரலை உயர்த்தி காட்டும் கற்சிலை செய்துள்ளார்.

3 நாளில் அதனை உருவாக்கிய சிற்பி சுரேஷ் அதனை திருவண்ணாமலை அருங்காட்சியகத்தில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருந்தார்.

மேலும் அவர் செய்த திருவள்ளுவர் சிலை, சாமி சிலைகள் உள்ளிட்டவைகளையும் வைத்திருந்தார். இதனை பார்வையிட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் பொதுமக்கள் சிற்பி சுரேசுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


Similar News