செய்திகள்
12 வயது பெண் யானையை மர்மநபர்கள் சுட்டுக்கொன்றனர்
தேன்கனிக்கோட்டை அருகே 12 வயது பெண் யானையை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதி உள்ளது. இங்கு அதிக அளவில் யானைகள் உள்ளன. அத்துடன் தற்போது கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வந்துள்ள 30-க்கும் மேற்பட்ட யானைகளும் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. அவற்றுள் குட்டி யானைகளும் உள்ளன.
இந்த யானைகள் இரவு நேரத்தில் உணவுக்காக வனப்பகுதியை விட்டு வெளியே வந்து அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன. இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக பொதுமக்கள் சென்றனர். அப்போது சென்னமாளம் என்ற இடத்தில் யானைகள் ஊருக்குள் வராமல் இருப்பதற்காக வனத்துறை-கிராமம் இடையே வெட்டப்பட்டுள்ள யானை தாண்டா அகழியில் 12 வயது பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது.
இதைப் பார்த்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஜவளகிரி வனச்சரகர் நாகராஜ் தலைமையிலான வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதில், அந்த யானை அகழியை கடந்தபோது மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றது தெரியவந்தது. பின்னர் வனத்துறையினர் கிரேன் மூலமாக யானையின் உடலை மீட்டனர்.
தொடர்ந்து வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
இதில் யானையின் பின்புற தலையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்ததும், மர்ம நபர்கள் யானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதும் உறுதியானது. இதைத்தொடர்ந்து யானையின் உடல் அந்த பகுதியில் புதைக்கப்பட்டது.
யானையின் உடலில் பாய்ந்திருந்த குண்டுகள், நாட்டுத்துப்பாக்கி மூலம் சுடப்பட்ட குண்டுகள் ஆகும். யானைகள் விவசாய நிலங்களுக்குள் வரக்கூடாது என்பதற்காக சுட்டார்களா? அல்லது தந்தங்கள் கடத்தும் கும்பல் சுட்டார்களா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடத்தில் உதவி வன பாதுகாவலர் ஜெகதீஷ் பகான் நேரில் விசாரணை நடத்தினார். ஜவளகிரி அருகே பெண் யானை சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.