செய்திகள்
வெங்காயம்

ஒரு கிலோ வெங்காயம் கொடுத்தால் அசைவ உணவு இலவசம்

Published On 2020-10-28 18:32 IST   |   Update On 2020-10-28 18:32:00 IST
வெங்காய விலை அதிகரித்து வரும் சூழலில் ஒரு கிலோ வெங்காயம் எடுத்து வந்தால் அசைவ உணவு இலவசம் என புதுவை ஒட்டல் ஒன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.


புதுவை கரிக்கலாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நிரூபன்.சமையல் கலை பயின்ற இவர் வெளிநாட்டில் பணியாற்றி விட்டு புதுவை திரும்பினார். பின்னர் நோணாங்குப்பம் படகுத்துறை அருகே ஜல்லிக்கட்டு பாரம்பரிய உணவகம் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இவர் தனது ஒட்டலுக்கு ஒரு கிலோ வெங்காயம் எடுத்து வந்தால் அசைவ உணவு இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இதனை அறிந்தவர்கள் வெங்காயத்தை கொடுத்து சாப்பிட்டு செல்கிறார்கள்.வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய- மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையிலும், பழைய பண்டமாற்று முறையை நினைவுபடுத்தும் வகையிலும் இந்த நிகழ்ச்சியை நடத்துவதாக ஒட்டல் உரிமையாளர் நிரூபன் கூறினார்.

இவர் ஏற்கனவே 100 திருக்குறள் ஒப்புவித்தால் குடும்பத்துடன் இலவசமாக சாப்பிடலாம். மாமியார்- மருமகள் இணைந்து வந்தால் தோசை இலவசம் என சலுகையில் உணவு விருந்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கிலோ வெங்காயத்துக்கு இலவச அசைவ சாப்பாடு

Similar News