செய்திகள்
கோப்புபடம்

ஊட்டி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-17 17:29 IST   |   Update On 2020-10-17 17:52:00 IST
எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊட்டி:

எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டத்தில் வங்கி அதிகாரிகளுக்கான தேர்வை ரத்து செய்ய வேண்டும், இட ஒதுக்கீடு உரிமையை பறித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டில் கை வைக்கக்கூடாது, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படக்கூடாது என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News