செய்திகள்
ஹோட்டல் ஊழியர் மீது சரமாரி தாக்குதல்

ஹோட்டல் ஊழியர் மீது சரமாரி தாக்குதல்- சிக்கனில், எலும்பு இல்லாததால் ஆத்திரம்

Published On 2020-10-11 13:01 IST   |   Update On 2020-10-11 13:01:00 IST
ஓட்டலில் இருந்து சாப்பிட வாங்கி சென்ற சிக்கனில், எலும்பு இல்லாததால், ஓட்டல் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பூந்தமல்லி:

பூந்தமல்லி அருகில் உள்ள சென்னீர்குப்பத்தில் ஒரு ஹோட்டலில், கடந்த சில நாட்களுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவர் சிக்கன் வாங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்கு வாங்கிச் சென்று சாப்பிட்டபோது, கறியில் எலும்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது நண்பருடன் அந்த ஓட்டலுக்கு வந்தார்.

அப்போது சிக்கனில் எலும்பு இல்லை என்று கூறி, ஊழியர் சாகுல் அமீதுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் சாகுல் அமீது மீது கன்னத்தில் தாக்கியதில், அவருக்கு ஒரு பக்க காது கேட்காததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான நிலையில், அதை வைத்து, தலைமறைவாக உள்ள கார்த்தியை, போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News