செய்திகள்
பெற்றோர்களுக்கு உதவியாக நாற்று நடும் பணியில் இறங்கிய மாணவர்கள்

பெற்றோர்களுக்கு உதவியாக நாற்று நடும் பணியில் இறங்கிய மாணவர்கள்

Published On 2020-09-05 07:30 GMT   |   Update On 2020-09-05 07:30 GMT
வயல்களில் இறங்கி நாற்று நடும் பணியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் ஆர்வமுடன் ஈடுபட்டு வருவதை பார்த்து அவர்களது பெற்றோர்கள் பூரிப்படைந்து வருகின்றனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் விவசாய பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாக அணைகள், குளங்கள், கண்மாய்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் அந்தந்த பகுதி விவசாயிகள் தங்கள் வயல்களை உழுது நாற்று நடும் பணியில் இறங்கியுள்ளனர். கொரோனா விடுமுறையில் வீட்டில் உள்ள அவர்களது பிள்ளைகளும் இது போன்ற பணியில் இறங்கியுள்ளனர்.

வயல்களில் இறங்கி நாற்று நடும் பணியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் ஆர்வமுடன் ஈடுபட்டு வருவதை பார்த்து அவர்களது பெற்றோர்கள் பூரிப்படைந்து வருகின்றனர். எந்த ஊரடங்கு ஏற்பட்டாலும் விவசாயம்தான் மக்களை காப்பாற்றும் என்பதை தங்கள் பிள்ளைகள் உணர்ந்துள்ளனர் என்று அவர்களுக்கும் விவசாயத்தை கற்றுக் கொடுத்து வருகின்றனர்.
Tags:    

Similar News