செய்திகள்
வருமான வரித்துறை

உர விற்பனை நிறுவன உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

Published On 2020-09-01 10:11 IST   |   Update On 2020-09-01 10:11:00 IST
ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் தனியார் மொத்த உர விற்பனை நிறுவன உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் தனியார் மொத்த உர விற்பனை நிறுவன உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நிலம் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்களிலும் ரெய்டு நடைபெற்றது.

கோவை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேர் தீவிர சோதனை நடத்தினர்.

இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் தனியார் உரவிற்பனை நிறுவன உரிமையாளர் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Similar News