செய்திகள்
கொரோனா வைரஸ்

சிவகங்கை நகர அதிமுக செயலாளர் கொரோனாவுக்கு பலி

Published On 2020-08-31 15:31 IST   |   Update On 2020-08-31 15:31:00 IST
சிவகங்கை நகர அ.தி.மு.க. செயலாளர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேவகோட்டை:

சிவகங்கை நகர அ.தி.மு.க. செயலாளர் வக்கீல் ஆனந்த் (வயது 53). கூட்டுறவு சங்கத்தின் பண்டக சாலை தலைவராகவும் உள்ள இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் சிவகங்கையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை நடத்தியதில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். நேற்று ஆபத்தான நிலையில் இருந்த ஆனந்த் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

கடந்த 20 ஆண்டுகளாக நகர செயலாளராக பணியாற்றி ஆனந்த் கொரோனாவுக்கு பலியானது கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனந்துக்கு அஞ்சுகம் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

Similar News