செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள்

4 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்- வாகன சோதனையின் போது போலீசார் அதிரடி

Published On 2020-08-22 14:19 IST   |   Update On 2020-08-22 14:19:00 IST
சென்னை அம்பத்தூரில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.
அம்பத்தூர்:

அம்பத்தூர் சூரப்பட்டு சுங்கச்சாவடி அருகே அதிகாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருச்சக்கர வாகனத்தில் வந்த இருவர், காவல்துறையினரை கண்டு தப்பி ஓடியுள்ளனர். அவர்களை துரத்திபிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களுக்கு பின்னால் வந்த லாரியில் செம்மரம் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அதை பறிமுதல் செய்து, லாரி ஓட்டுனர் டேவிட், முகமது அப்பாஸ் ஆகிய இருவரை கைது செய்தனர். தப்பியோடிய மற்ற இருவரை தேடிவருகின்றனர். பிடிப்பட்ட4  டன் செம்மரக்கட்டைகள் சுமார் இரண்டு கோடி மதிப்பிலானது என போலீசார் தெரிவித்துள்ளனர். கடத்தலுக்கு பயன்டுத்திய ஒரு லாரி, இரண்டு பைக்குகளையும் அம்பத்தூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News