செய்திகள்
திமுக நிர்வாகிகள்

மதுராந்தகம் பெண் உயிரிழப்பு- திமுக நிர்வாகிகள் இடைநீக்கம்

Published On 2020-07-04 20:16 IST   |   Update On 2020-07-04 20:16:00 IST
மதுராந்தகம் பெண் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் என கூறப்படும் திமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மதுராந்தகம்:

மதுராந்தகத்தில் தனது தங்கையின் இறப்பில் மர்மம் இருப்பதால் மீண்டும் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பெண்ணின் சகோதரர் சுடுகாட்டில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம் இடைக்கழிநாடு பேரூர்க்கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.தேவேந்திரன், டி.புருஷோத்தமன் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவர்கள் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Similar News