செய்திகள்
8 மாதங்களுக்கு பிறகு டீ, காபி விலை குறைந்தது
இன்று ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டு மீண்டும் டீ கடைகள் திறக்கப்பட்டன. வேலூரில் 8 மாதங்களுக்கு பிறகு டீ மற்றும் காபி விலை குறைந்துள்ளது.
வேலூர்:
வேலூரில் கடந்த ஆகஸ்டு மாதம் பால் விலை உயர்வு காரணமாக டீ காபி விலை உயர்த்தப்பட்டது டீ காபி 12 க்கு விற்பனையானது.
சில ஓட்டல்களில் ரூ. 15 முதல் 16 வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்தநிலையில் ஊரடங்கு காரணமாக அனைத்து ஓட்டல் டீ கடைகள் மூடப்பட்டன. கேன்களில் சைக்கிளில் சென்று டீ விற்பனை செய்து வந்தனர். அவர்கள் 10 ரூபாய்க்கு டீ, காபி விற்பனை செய்தனர். இன்று ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டு மீண்டும் டீ கடைகள் திறக்கப்பட்டன. பெரும்பாலான டீக்கடைகளில் டீ, காபி விலை குறைத்துள்ளனர். ரூ.10க்கு டீ, காபி விற்பனையானது.