செய்திகள்
மாணவன் சேமித்து வைத்த உண்டியல் பணம்

தூய்மைப் பணியாளர்களுக்காக உண்டியல் பணத்தை வழங்கிய 3-ம் வகுப்பு மாணவன்

Published On 2020-04-29 15:41 IST   |   Update On 2020-04-29 15:41:00 IST
நாகை மாவட்டம் சீர்காழியில் தூய்மைப் பணியாளர்களுக்காக சேமித்து வைத்த உண்டியல் பணத்தை 3-ம் வகுப்பு மாணவன் நன்கொடையாக வழங்கினான்.
சீர்காழி:

உலகம் எங்கும் கொரோனா தொற்று பரவி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் அதனை எதிர்கொள்ளும் போராட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்களின் பங்கு மிக சிறப்பாக அமைந்து வருகிறது.

இந்த செய்திகளை பார்த்து அறிந்த வைத்தீஸ்வரன்கோவில் பகுதியை சேர்ந்த மாணவன் ஜெயஸ்ரீவர்மன்(வயது8) சிறிய மிதிவண்டி வாங்கிடும் ஆசையில் தான் பல ஆண்டுகளாக உண்டியலில் சேர்த்து வைத்த ரூ.4586-ஐ பேரூராட்சி செயல் அலுவலர் குகனிடம் வழங்கினார்.

மாணவன் வழங்கிய தொகையினை கொண்டு பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாலை நேரத்தில் சுண்டல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செயல்அலுவலர் தெரிவித்தார். இந்த மாணவன் பேரூராட்சி ஓட்டுநர் மணிவண்ணனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News