செய்திகள்
கொரோனா வைரஸ்

லண்டனில் இருந்து வந்த காட்பாடி பாதிரியாருக்கு கொரோனா அறிகுறி

Published On 2020-03-28 08:21 GMT   |   Update On 2020-03-28 08:21 GMT
லண்டனில் இருந்து வந்த காட்பாடி பாதிரியாருக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் அவருக்கு வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த 49 வயதான பாதிரியார் லண்டன் சென்றுள்ளார். அங்கு ஒரு மாதம் தங்கியிருந்த அவர் கடந்த 18-ந்தேதி ஊருக்கு திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் பரிசோதித்த போது அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை. இதனையடுத்து வீட்டிற்கு வந்த அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.

இதனையடுத்து வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. அவருடைய ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிரியாரின் மனைவி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரது வீட்டில் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டி உள்ளனர். பொதுமக்கள் யாரும் பாதிரியார் வீட்டுக்கு செல்ல வேண்டாம். வீட்டில் இருப்பவர்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாக பாதிரியார் தெரிவித்துள்ளார். அவர் வெளியே எங்கும் சென்றாரா? என்பது குறித்து சுகாதாரத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News