செய்திகள்
சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள காட்சி.

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே காட்பாடி சாலையில் விபத்து தடுக்க தடுப்புகள்

Published On 2020-01-18 15:08 GMT   |   Update On 2020-01-18 15:08 GMT
வேலூர் கிரீன் சர்க்கிளில் காட்பாடி செல்லும் பாதையில் விபத்து தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

வேலூர்:

வேலூர் கிரீன் சர்க்கிளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சிக்னல் விழுந்தவுடன் வாகன ஓட்டிகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.

கிரீன் சர்க்கிளில் இருந்து காட்பாடி செல்லும் பாதையில் ஒரு சில வாகனங்கள் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் பாதையில் எதிர்த்திசையில் செல்கின்றன. இதனால் பஸ் நிலையத்திலிருந்து வரும் பஸ்கள் இருசக்கர வாகனங்கள் மீது மோதும் சூழ்நிலை ஏற்படுகிறது.

கடந்த வாரம் தனியார் பஸ் ஒன்று கிரீன் சர்க்கிளில் இருந்து புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் பாதையில் எதிர்த் திசையில் சென்றது.

அப்போது பைக்கில் வேகமாக வந்த வாலிபர் ஒருவர் அந்த பஸ் மீது மோதி படுகாயமடைந்தார். இந்த காட்சிகள் பஸ்சில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

மேலும் சமூக வலைதளங்களிலும் பரவியது. இதனையடுத்து கிரீன் சர்க்கிளில் இருந்து காட்பாடி செல்லும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு செல்லும் பாதையில் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அந்த பாதையில் வாகனங்கள் செல்ல முடியாதபடி இன்று காலை தடுப்புகள் அமைக்கப்பட்டன.

இதனால் வாகனங்கள் சீராக வந்து செல்கின்றன. இதற்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு அளித்துள்ளனர்.

Tags:    

Similar News