செய்திகள்
ஏரி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 153 ஏரிகள் நிரம்பியது

Published On 2019-12-02 09:18 GMT   |   Update On 2019-12-02 09:18 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 153 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. ஏரிகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இதன் காரணமாக அனைத்து ஏரிகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

பண்ருட்டி புது ஏரி, மாத்தூர் ஏரி, கூரம் சித்தேரி, பனையூர் ஏரி, கரூர் ஏரி, நத்தப்பேட்டை ஏரி, வையாவூர் ஏரி, மாம்பாக்கம் ஏரி, நாவலூர் ஏரி, களியனூர் ஏரி, குண்ணவாக்கம் ஏரி, கடலைப்புத்தூர் ஏரி உள்ளிட்ட 153 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன.

142 ஏரிகள் 50 சதவீதமும், 149 ஏரிகள் 25 சதவீதமும் மற்ற ஏரிகள் இதற்கு குறைவாக நிரம்பியுள்ளன. ஏரிகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News