செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயிலில் இதுவரை 3.81 கோடி பேர் பயணம்

Published On 2019-05-15 09:37 GMT   |   Update On 2019-05-15 09:37 GMT
சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த 2015 ஜூன் 29-ம் முதல் நேற்று 14-ந்தேதி வரை மொத்தம் 3 கோடியே 81 லட்சத்து 3 ஆயிரத்து 799 பேர் பயணம் செய்துள்ளார்கள்.
சென்னை:

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதி தொடங்கப்பட்டது. பாதுகாப்பான பயணம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து இணைப்பு போக்குவரத்து வசதி வாகனம் நிறுத்துமிட வசதி செய்யப்பட்டு இருப்பது பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது.

தற்போது சில மெட்ரோ நிலையங்களில் இயங்கிக் கொண்டு இருக்கும் ஷேர் ஆட்டோ மற்றும் ஷேர் டாக்சி சேவைகள் விரைவில் அனைத்து 32 மெட்ரோ நிலையங்களிலும் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பயணிகளின் பெரும் ஆதரவால் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதில் இருந்து நாளுக்கு நாள் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மெட்ரோ ரெயிலில் கடந்த 2015 ஜூன் 29-ம் முதல் நேற்று 14-ந்தேதி வரை மொத்தம் 3 கோடியே 81 லட்சத்து 3 ஆயிரத்து 799 பேர் பயணம் செய்துள்ளார்கள்.

ஜூன் 2015 முதல் டிசம்பர் 2015 வரை 26,33,890 பேர், ஜனவரி 2016 முதல் டிசம்பர் 2016வரை 36,30,216 பேர், ஜனவரி 2017 முதல் டிசம்பர் 2017வரை 73,99,282 பேர், ஜனவரி 2018 முதல் டிசம்பர் 2018 வரை 1,43,88,969 பேர், 2019 ஜனவரி முதல் மே 14-ம் தேதிவரை 1,00,51,442 பேர் பயணம் செய்து இருக்கிறார்கள்.

இந்த தகவலை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News