செய்திகள்

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் - பாட வாரியாக தேர்ச்சி விகிதம்

Published On 2019-05-08 05:04 GMT   |   Update On 2019-05-08 05:04 GMT
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் பாடப்பிரிவுகள் வாரியாக தேர்ச்சி விகிதத்தை பார்ப்போம். #Plus1Result
சென்னை:

11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.5 சதவீதமும், மாணவர்கள் 93.3 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகள் 90.6 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 2,636 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.



இந்த தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி  விகிதம் பின்வருமாறு:

அறிவியல் பாடப்பிரிவுகள் - 93.9%
வணிகவியல் பாடப்பிரிவுகள்- 97.4%
கலைப்பிரிவுகள் - 95.1%
தொழிற்பாடப்பிரிவுகள்- 92.3%.

முக்கிய பாடங்களில் தேர்ச்சி  விகிதம் பின்வருமாறு:

இயற்பியல் - 94.6%
வேதியியல்- 95.7%
உயிரியல் - 97.1%
கணிதம் - 96.9%
தாவரவியல் - 91.1%
விலங்கியல்- 93%
கணினி அறிவியல் - 98.2%
வணிகவியல்- 97.7%
கணக்குப்பதிவியல் - 97.7%

பள்ளிகள் வகைப்பாட்டு வாரியான தேர்ச்சி  விகிதம் பின்வருமாறு:

அரசுப்பள்ளிகள்- 90.6%
அரசு உதவிப்பெறும் பள்ளிகள் - 96.9%
மெட்ரிக் பள்ளிகள்- 99.1%
இருபாலர் பள்ளிகளில் பயின்றோர்-96.8%
பெண்கள் பள்ளிகள்- 96.8%
ஆண்கள் பள்ளிகள்- 90.2% #Plus1Result





 
Tags:    

Similar News