செய்திகள்

சேலத்தில் இளம்பெண் தீக்குளிப்பு - கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவர் கைது

Published On 2019-04-30 13:18 GMT   |   Update On 2019-04-30 13:18 GMT
சேலத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் ஜீவா (வயது 28). வேன் டிரைவர். இவருக்கும் சேலம் தாதம்பட்டியை சேர்ந்த கலைச்செல்வி (23) என்பவருக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கலைச்செல்வி, கணவர் வீட்டில் இருந்து வெளியில் ஓடி வந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரை மீட்டனர். ஆனாலும் அவரது உடல் 90 சதவீதம் கருகியது.

பின்னர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மகளின் இந்த நிலைக்கு காரணமான ஜீவா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கலைச்செல்வியின் தாய் இந்திராணி மற்றும் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேலும் கலெக்டர் அலுவலக புகார் பெட்டியில் போட்ட மனுவில், திருமணம் முடிந்ததில் இருந்தே எனது மகளை அவரது கணவர் ஜீவா கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தார். இதனால் மேலும் 5 பவுன் நகை மற்றும் சீர் வரிசை பொருட்களை கொடுத்தேன். ஆனாலும் அவர் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தார் என்றும் கூறி இருந்தனர்.

இது குறித்து விசாரணை நடத்திய கன்னங்குறிச்சி போலீசார் ஜீவா மீது கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துதல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News