செய்திகள்

குளிர் தாங்காமல் உயிரிழந்த 2 குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி- முதலமைச்சர் அறிவிப்பு

Published On 2019-04-25 11:11 IST   |   Update On 2019-04-25 11:11:00 IST
அரியலூர் மாவட்டத்தில் குளிர் தாங்காமல் உயிரிழந்த 2 குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #Edappadipalaniswami
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தா. பழூர் மதுரா, பாலசுந்தரபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துப் பிரியாவின் மகன்கள் ராமன், லட்சுமணன் ஆகிய இரட்டை குழந்தைகளும், மழையின் காரணமாக, தொகுப்பு வீட்டின் கூரை மற்றும் தரைதளம் வழியாக நீர் கசிவு ஏற்பட்டு, குளிர் தாங்காமல் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

வடகிழக்கு பருவமழையின் போது, குளிர் தாங்காமல் உயிரிழந்த குழந்தைகள் ராமன், லட்சுமணன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாவட்ட ஆட்சியரின் அறிக்கையினை கருத்தில் கொண்டு இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்- அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். #TNCM #Edappadipalaniswami
Tags:    

Similar News