செய்திகள்

சூலூர் தொகுதி இடைத்தேர்தல் பண வினியோகத்தை தடுக்க கூடுதலாக 9 பறக்கும்படை

Published On 2019-04-24 05:21 GMT   |   Update On 2019-04-24 10:20 GMT
சூலூர் தொகுதி இடைத்தேர்தல் பண வினியோகத்தை தடுக்க கூடுதலாக 9 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #Election

கோவை:

கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்கு அடுத்த மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் எடுத்து செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடத்தை விதிமீறல் புகார்களை பொதுமக்கள் 1800 425 4757 என்ற கட்டண மில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளனர்.

மேலும், சூலூர் தொகுதியில் பணி வினியோகத்தை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த தொகுதியில் உள்ள பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தவிர கூடுதலாக 9 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடை பெற அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜா மணி கூறினார். #Election

Tags:    

Similar News