செய்திகள்

பொன்பரப்பி வன்முறை- விடுதலை நிறுத்தைகள் மறியல்

Published On 2019-04-19 08:25 GMT   |   Update On 2019-04-19 08:25 GMT
பொன்பரப்பி வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். #LokSabhaElections2019 #VCKProtest
அரியலூர்:

தமிழகத்தில் நேற்று பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்றபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவர் திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் கடும் வன்முறை வெடித்தது. திருமாவளவனின் தேர்தல் சின்னமான பானையை சிலர் போட்டு உடைத்தனர். இதை சிலர் தட்டிக்கேட்டதால் மோதல் ஏற்பட்டது. மோதலின்போது சுமார் 20 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், பொன்பரப்பி மோதலுக்கு காரணமான உண்மை குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆங்காங்கே மரங்களை வெட்டிப் போட்டு சாலைகளில் தடைகளை ஏற்படுத்தினர்.

சிவகங்கை மாவட்டம் கரிசல்பட்டி, புழுதிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. #LokSabhaElections2019 #VCKProtest
Tags:    

Similar News