செய்திகள்

கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம்- போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

Published On 2019-04-07 20:33 IST   |   Update On 2019-04-07 20:33:00 IST
பொள்ளாச்சி மாணவி கொலையில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று போலீஸ் சூப்பிரண்டு கூறியுள்ளார். #PollachiIssue #StudentMudercase #SpecialForces

கோவை

கோவையில் மாயமான கல்லூரி மாணவி பிரகதி பொள்ளாச்சி பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கும் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா, டி.ஐ.ஜி. கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஆகியோர் சென்றனர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 

இதில் ஒரு தனிப்படையினர் காந்திபுரம், பொள்ளாச்சி, பல்லடம் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மற்றொரு தனிப்படையினர் மாணவியின் செல்போன் அழைப்புகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் கூறுகையில், மாணவி கொலை வழக்கில் முக்கிய தடயங்கள் சிக்கி உள்ளது. அதை வைத்து விசாரணை நடத்தியதில் துப்பு கிடைத்துள்ளது. விரைவில் கொலையாளிகளை கைது செய்வோம் என்றார்.  #PollachiIssue #StudentMudercase #SpecialForces

Tags:    

Similar News