செய்திகள்
சமத்துவ மக்கள் கட்சியினர் விருப்ப மனு கொடுக்கலாம்
பாராளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுவோர் விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சமத்துவ மக்கள் கட்சி வெளிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சரத்குமார் உத்தரவுப்படி வருகின்ற 9, 10-ந்தேதிகளில் கட்சி தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் தேர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது.
9-ந்தேதி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர் உள்ளிட்ட பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனு பெறப்படும்.
10-ந்தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு பெறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.