செய்திகள்

தேமுதிக உள்பட பல கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2019-03-08 09:28 IST   |   Update On 2019-03-08 09:28:00 IST
தே.முதி.க. உள்பட மேலும் பல கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இணையும் என துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். #ADMK #OPanneerselvam #DMDK #LSPolls
தேனி:

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்டணியும் அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு நிறைவு பெற்றுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜ.க, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தே.மு.தி.க.வையும் கூட்டணியில் சேர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் தொடர் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த சுதீஷ் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை ஓரிரு நாளில் நிறைவு பெறும் என்றார்.

இதனிடையே நேற்று மாலை தேனியில் நடந்த அரசு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில்:-

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. மட்டுமல்ல, மேலும் பல கட்சிகள் இதற்கான வாய்ப்புகள் உள்ளது. தே.மு.தி.க.வுடன் இன்னும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி ஓரிரு நாளில் இறுதி வடிவம் பெறும்.

இவ்வாறு அவர் கூறினார். #ADMK #OPanneerselvam #DMDK #LSPolls

Similar News