செய்திகள்

டாஸ்மாக் பார்களை ஏன் முழுவதுமாக மூடக்கூடாது - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி

Published On 2019-02-26 10:12 GMT   |   Update On 2019-02-26 14:16 GMT
டாஸ்மாக் பார்களை ஏன் முழுவதுமாக மூடக்கூடாது? என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். #MaduraiHCBench #Tasmac
மதுரை:

மதுரையை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் டாஸ்மாக் கடைகள் குறித்து தாக்கல் செய்த மனு, இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துகள், உயிர் பலிகள் ஏற்படுகின்றன என்று கூறிய நீதிபதிகள், டாஸ்மாக் பார்களை ஏன் முழுவதுமாக மூடக்கூடாது? டாஸ்மாக் கடை திறப்பை பிற்பகல் 2 மணி முதல் 10 மணி வரை என ஏன் மாற்றக்கூடாது? என்று கேள்வி எழுப்பினர்.



மேலும் மது வாங்குவதற்கு ஆதார் கார்டை ஏன் கட்டாயமாக்கக் கூடாது? மதுரையில் டாஸ்மாக் பார்களின் உரிமத்தை ஓராண்டில் இருந்து இரண்டாண்டாக நீட்டித்தது ஏன்? என்றும் கேட்டனர்.

இந்த கேள்விகளுக்கு வருகிற 12-ந்தேதி டாஸ்மாக் நிர்வாக மேலாளர் நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். #MaduraiHCBench #Tasmac

Tags:    

Similar News