செய்திகள்

பார்வையற்ற 239 பேருக்கு ஆசிரியர் வேலை- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

Published On 2019-02-11 07:27 GMT   |   Update On 2019-02-11 07:27 GMT
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது 239 பார்வையற்றோர் ஆசிரியர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #TNAssembly #Sengottaiyan
சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. நடராஜ் ஆசிரியர் தகுதி தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் 4691 பேர் கலந்து கொண்டனர். இதில் 945 பேர் தேர்ச்சி பெற்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு என்ற அடிப்படையில் இந்த தேர்வு நடந்தது.

இதில் தற்போது 239 பார்வையற்றோர் ஆசிரியர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். முன்பு தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் பெற்றால்தான் வேலைவாய்ப்பு என்ற நடைமுறை இருந்தது. மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா அந்த மதிப்பெண்ணை 82 ஆக குறைத்தார். அதன் அடிப்படையில் தற்போது இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தற்காலிக ஆசிரியர்களை 750 ரூபாய் என்ற சம்பள அடிப்படையில் பணியமர்த்த அரசு முடிவு செய்தது. தற்போது இதுதொடர்பாக வழக்கு நடந்து வருவதால் தற்காலிக ஆசிரியர்களை தற்போது நியமிக்க இயலவில்லை.

இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly #Sengottaiyan
Tags:    

Similar News