செய்திகள்
கோப்புப்படம்

ஜோலார்பேட்டை அருகே தண்டவாளத்தில் விரிசல்- 5 ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்

Published On 2019-01-31 05:07 GMT   |   Update On 2019-01-31 05:07 GMT
ஜோலார்பேட்டை அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் 5 ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டையில் இருந்து மொரப்பூர் இடையேயான தண்டவாளம் பராமரிப்பு பணியில் ரெயில்வே ஊழியர்கள் இன்று காலை ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காக்கங்கரை என்ற இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்ட ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அதிகாரிகள் உடனடியாக அந்த மார்க்கமாக வந்த டாடா நகர் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ், ஐதராபாத் - எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ், சாலிமார் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் உள்பட 5 ரெயில்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியிலேயே நிறத்தப்பட்டது.

ரெயில்வே பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்தனர்.

பின்னர் 5 ரெயில்களும் 1 மணி நேர காலதாமதத்திற்கு பிறகு புறப்பட்டு சென்றன. ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள விரிசலை கண்டு பிடித்து சரி செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Tags:    

Similar News