செய்திகள்

ஒகேனக்கல் அருகே சத்துணவு அமைப்பாளர் கழுத்தை அறுத்து கொலை

Published On 2019-01-27 21:48 IST   |   Update On 2019-01-27 21:58:00 IST
ஒகேனக்கல் அருகே சொத்து தகராறில் சத்துணவு அமைப்பாளரை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒகேனக்கல்:

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜம்மா (வயது53). இவரது தம்பி சாம்ராஜ் (48). ராஜம்மாவுக்கும், சாம்ராஜிக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. ராஜம்மா கணவர் இறந்ததால் ஒகேனக்கல் அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலைபார்த்து வந்தார். இன்று காலை ராஜம்மா வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த சாம்ராஜ் சொத்து பிரச்சனை குறித்து பேசினார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

ஆத்திரமடைந்த சாம்ராஜ் தனது அக்கா என்று கூட பார்க்காமல் வீட்டில் ராஜம்மாவை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து ராஜம்மா பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்து விட்டு அங்கிருந்து சாம்ராஜ்  ஒகேனக்கல் போலீசில் சரண் அடைந்தார். 

இது குறித்து ஒகேனக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த ராஜம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News