செய்திகள்

பாராளுமன்ற தேர்தலுடன் 20 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும்- அமைச்சர் கேபி அன்பழகன்

Published On 2019-01-12 10:58 GMT   |   Update On 2019-01-12 10:58 GMT
பாராளுமன்ற தேர்தலுடன், 20 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி, ஜன.12-

தர்மபுரி மாவட்டம் அரூரில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசியதாவது:-

கஜா புயல் நிவாரண பணிகள் முழுமையாக முடியாததால் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு அரூர், பாப்பிரெட்டிப் பட்டி உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் என்று கருதி பூத் கமிட்டி அமைக்கப்பட்டது. 200 பேருக்கு ஆறு பேர் கொண்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். நாமக்கல், ஈரோடு, மாவட்டங்களில் இருந்து பொறுப்பாளர்கள் தேர்தல் பணிக்கு வந்தனர்.

பாராளுமன்ற தேர்தல் மார்ச் மாதத்தில் வர உள்ளதால், அதற்குள் இடைத்தேர்தல் நடத்த மாட்டார்கள். எனவே, பாராளுமன்ற தேர்தலுடன், 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும்.

அப்போது, வெளி மாவட்டத்தில் இருந்து, தேர்தல் பணிக்கு யாரும் வரமாட்டார்கள். எனவே, கட்சியினர் முழு முயற்சி எடுத்து பாடுபட வேண்டும். அப்போதுதான் கட்சி, ஆட்சி இரண்டையும் நிறுத்த முடியும்.

அரூர், பாப்பிரெட்டிப் பட்டி தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று தலைமை நம்பிக்கை வைத்து உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News