செய்திகள்

தா.பாண்டியனை கைது செய்ய வேண்டும்- ஈரோடு கலெக்டரிடம் புகார்

Published On 2019-01-07 19:19 IST   |   Update On 2019-01-07 19:19:00 IST
ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசிய தா பாண்டியனை கைது செய்ய வேண்டும் என்று ஈரோடு கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. #thapandian

ஈரோடு:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தா. பாண்டியனுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

அப்போது ஒரு சமூகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா பாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டியின் போது காஜா புயல் பாதிப்பு பற்றி பேசியபோது சாமியார்களும் பண்டாரங்களும் பழையபடி நம்மை பண்டாரமாக்க முயற்சிக்கின்றனர் என்று கூறினார். இது எங்கள் சமூகத்தை சேர்ந்த மக்களை புண்படுத்துவதாக உள்ளது.

தா.பாண்டியன் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தா பாண்டியன் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட வேண்டும் இல்லையென்றால் சென்னையில் உள்ள அவரது வீட்டை முற்றுகை இடுவோம்.

இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News