செய்திகள்

உயர்கல்வி தேர்ச்சியில் தமிழகம் முதலிடம்- அமைச்சர் கே.பி. அன்பழகன்

Published On 2019-01-07 10:36 GMT   |   Update On 2019-01-07 10:36 GMT
உயர் கல்வித்துறையில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது பல்வேறு இடங்களில் புதிய கல்லூரிகள் அமைக்க வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியதாவது:-

புரட்சி தலைவி அம்மா ஆட்சியில் இருந்த போது தமிழகம் முழுவதும் 45 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டன. தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 11 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இவை தவிர எங்கெல்லாம் கல்லூரி தேவைப்படுமோ அங்கு ஆய்வு செய்து மாணவர்கள் நலனுக்கேற்ப முடிவுகள் எடுக்கப்படும். தற்போது உயர் கல்வித் துறையில் மாணவ, மாணவிகள் சதவீதம் 48.6 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்திய அளவில் இது முதலிடமாகும். #TNAssembly

Tags:    

Similar News