செய்திகள்

பனிப்பொழிவால் உற்பத்தி பாதிப்பு- மல்லிகை பூ கிலோ ரூ.1700-க்கு விற்பனை

Published On 2018-12-28 16:20 IST   |   Update On 2018-12-28 16:20:00 IST
தோவாளை மார்க்கெட்டுக்கு மல்லிகைப்பூ குறைந்தளவே வந்துள்ளது. இதனால் மல்லிகைப்பூவின் விலை கிலோவுக்கு ரூ.1700 அதிகரித்துள்ளது. #Jasmine
நாகர்கோவில்:

தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. நெல்லை, குமரி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பல விதமான பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

பழவூர், ஆவரைக்குளம், அருப்புக்கோட்டை, மதுரை போன்ற இடங்களில் இருந்து மல்லிகைப்பூ தோவாளை மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும். தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் மல்லிகைப்பூ உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது.

இதனால் தோவாளை மார்க்கெட்டுக்கு மல்லிகைப்பூவும் குறைந்தளவே வந்துள்ளது. இதனால் மல்லிகைப்பூவின் விலை அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1100-க்கு விற்பனையானது. இன்று ஒரு கிலோ ரூ.1700-க்கு விற்பனையானது.

ரூ.750-க்கு விற்பனையான பிச்சிப்பூ இன்று ரூ.850 ஆக உயர்ந்திருந்தது. அதேபோல ரூ.500-க்கு விற்ற கனகாம்பரம் ரூ.600 ஆக இருந்தது. சம்பங்கி ரூ.50, மஞ்சகேந்தி ரூ.60, ரோஜா ரூ.90, செவ்வந்தி ரூ.100, கொழுந்து ரூ.150, வாடாமல்லி ரூ.60, கோழிப்பூ ரூ.60 ஆக விற்பனையானது.

ரூ.5-க்கு விற்பனையான தாமரைப்பூ இன்று ரூ.10 ஆக விற்கப்பட்டது.

புத்தாண்டு மற்றும் திருமண நாட்கள் வருவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. வரத்து குறைவாக இருப்பதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. #Jasmine
Tags:    

Similar News