செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே விபத்தில் டிரைவர் பலி

Published On 2018-12-24 09:58 IST   |   Update On 2018-12-24 09:58:00 IST
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி:

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா, கச்சுபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது35). இவர் சென்னை தாம்பரம் அருகே உள்ள கிரசர் குவாரியில் லாரி டிரைவராக இருந்தார். தனது இரு சக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு வந்து கொண்டு இருந்தார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே காளிப்பேட்டை என்ற இடத்தில் தனியார் கிழங்கு மில் அருகே வரும்போது மின் கம்பத்தின் மீது இவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

இந்த விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News