செய்திகள்

பெண் ஏட்டுவுடன் அத்துமீறி நடந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது, மிரட்டி பாலியலில் ஈடுபட்டதாக வழக்குபதிவு

Published On 2018-12-19 15:05 GMT   |   Update On 2018-12-19 15:05 GMT
திருச்சி அருகே பெண் ஏட்டுவுடன் போலீஸ் நிலையத்தில் அத்துமீறி நடந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது, மிரட்டி பாலியலில் ஈடுபட்டதாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. #womanpolicemolestation
திருச்சி

திருச்சி அருகே உள்ள சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாலசுப்பிரமணி (வயது 51). இவர் கடந்த 10-ந்தேதி இரவுப்பணியில் இருந்த போது அதே காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் 32 வயதுள்ள பெண்ணிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தகவல் வந்தது. இந்த சம்பவம் நடந்த போது நேரில் பார்த்த உளவுத்துறை போலீஸ்காரர் ஒருவர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் இதனை நேரில் பார்த்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெண் ஏட்டும் போலீசில் புகார் செய்தார்.

அதனை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. ஜியாவுல் ஹக், எஸ்.எஸ்.ஐ. பாலசுப்பி ரமணியனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். சம்பவம் நடந்தபோது இருவரும் பணியில் இருந்ததால் துறை ரீதிகயாவும் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. சுமார் 2 நிமிடம் 50 விநாடிகள் உள்ள அந்த வீடியோவில் எஸ்.எஸ்.ஐ. காவல் நிலையத்திற்கு வந்தததும் பெண் ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதுபோல் பதிவாகியிருந்தது.

ஆனால் பெண் ஏட்டு தன் இருக்கையை விட்டு எழும்பாமல் அமர்ந்தபடியே இருந்திருந்தார். இதனால் அவரின் சம்மதத்துடனேயே இது நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். புகார் அளித்த பெண் ஏட்டு மருத்துவ விடுப்பு பெற்றுக் கொண்டு விடுமுறையில் சென்று விட்டார்.

டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் முசிறி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, பெண் ஏட்டுவின் வீட்டிற்கே சென்று விசாரணை நடத்தினார். அப்போது அவர் கூறிய தகவல்கள் மாவட்ட எஸ்.பி.யிடம் தெரிவிக்கப்பட்டது.
பெண் ஏட்டு அளித்த தகவலின் அடிப்படையில் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ. பாலசுப் பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

பெண் போலீசை பணி செய்யவிடாமல் தடுத்தல், பாலியல் ரீதியாக துன்புறுத்துதல், மிரட்டல் விடுத்தல் என்ற 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர். ஆனால் தன் மீது மட்டும் நடவடிக்கை ஏன்? அவரின் சம்மதத்துடன் தான் முத்தம் கொடுத்தேன் என பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் அவர் எதிராக புகார் ஏதும் செய்யாததால் பெண் போலீசின் புகார் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு  வருகிறது. மேலும் காவல் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டது யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #womanpolicemolestation
Tags:    

Similar News