செய்திகள்
கிரானைட் முறைகேடு வழக்கில் 2 பேருக்கு பிடிவாரண்டு
கிரானைட் முறைகேடு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த 2 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. #Granitescam
மேலூர்:
கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்குகள் மேலூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணைக்கு முன்னாள் எம்.எல்.ஏ. வேலுசாமி உள்பட பலர் ஆஜரானார்கள்.
அதே நேரத்தில் வழக்கில் தொடர்புடைய பலராமன், ஆந்திராவை சேர்ந்த கவுதம் குமார் ரெட்டி ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி பழனிவேல் உத்தரவிட்டார். வழக்கு விசாரணை ஜனவரி 23-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. #Granitescam