செய்திகள்
கவுந்தப்பாடியில் பள்ளி அருகே குட்கா விற்ற 4 வியாபாரிகள் கைது
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் பள்ளிக்கூடம் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்காவை விற்பனை செய்த 4 வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் பள்ளிக்கூடம் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பொருளான ‘குட்கா’ விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் கூறப்பட்டது.
இதையொட்டி கவுந்தப்பாடி போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் இறங்கினர். அப்போது 4 கடை உரிமையாளர்கள் தடை செய்யப்பட்ட குட்கா விற்றதை கண்டனர்.
அவர்களிடம் இருந்து குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையொட்டி குட்கா விற்பனை செய்ததாக நரேன்லால் (25) பழனிசாமி (55) சிபி அகமது (55), பாலசுப்பிரமணியம் (38) ஆகிய 4 பேரை கவுந்தப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி கைது செய்தார்.
கைதான 4 போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.