செய்திகள்

குடும்பத்தகராறில் மனைவியை எரித்து கொல்ல முயன்ற கணவரும் தீயில் சிக்கி 2 பேரும் பலி

Published On 2018-11-27 16:19 IST   |   Update On 2018-11-27 16:19:00 IST
திருமங்கலம் அருகே மனைவியை கொல்வதற்காக மண்எண்ணை ஊற்றி தீ வைத்த கணவரும் அதே தீயில் சிக்கி இறந்தது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பேரையூர்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்டது எஸ்.வலையங்குளம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோ (வயது29), கூலி தொழிலாளி.

இவரது மனைவி பஞ்சவர்ணம் (27). இவர்களுக்கு 7 வயதில் செல்வகுமார் என்ற மகன் உள்ளார். கடந்த சில வாரங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.

சம்பவத்தன்று இரவும் தகராறு ஏற்பட ஆத்திரம் அடைந்த இளங்கோ வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து மனைவி மீது ஊற்றினார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் தீ வைத்து விட்டு கதவை சாத்தி விட்டு வெளியே வந்து விட்டார்.

அப்போது உள்ளே இருந்த செல்வகுமாரின் அழுகுரல் கேட்டது. உடனே மகனை காப்பாற்ற இளங்கோ கதவை திறந்து கொண்டு உள்ளே போனார். அப்போது உடலில் தீயுடன் அலறி துடித்துக் கொண்டிருந்த பஞ்சவர்ணம் கணவரை கட்டிப்பிடித்தார். இதில் அவரது ஆடையிலும் தீ பிடித்தது.

சிறிது நேரத்தில் அவரும் வலியால் அலறி துடித்தார். கணவன்-மனைவியின் கூக்குரல் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர்.

ஆபத்தான நிலையில் அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இளங்கோ பரிதாபமாக இறந்தார். இன்று அதிகாலை பஞ்சவர்ணமும் இறந்தார். #tamilnews
Tags:    

Similar News