செய்திகள்

2 மணி நேரத்தில் ராமேசுவரத்தில் 23 செ.மீ. மழை

Published On 2018-11-24 13:48 IST   |   Update On 2018-11-24 13:48:00 IST
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்தது. அதிகபட்சமாக ராமேசுவரத்தில் 23 செ.மீ. மழை பெய்துள்ளது. இது 2 மணி நேரத்தில் பெய்த மழை அளவாகும். #TNRains
ராமேசுவரம்:

காற்றழுத்த தாழ்வு நிலை உள்மாவட்டங்களில் வலு இழந்த நிலையில் மேலடுக்கு சுழற்சியாக தமிழகத்தின் பல மாவட்டங்கள் மீது பரவியது. இதன் காரணமாக நேற்று பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்தது.

அதிகபட்சமாக ராமேசுவரத்தில் 23 செ.மீ. மழை பெய்துள்ளது. இது 2 மணி நேரத்தில் பெய்த மழை அளவாகும்.

வலங்கைமானில் 19 செ.மீ., திருவாரூர், நாகையில் 17 செ.மீ., பாபநாசம், பாம்பன், நீடாமங்கலம், கும்பகோணத்தில் தலா 15 செ.மீ., குடவாசல் 14 செ.மீ., பாண்டவையர் தலை (திருவாரூர்) 12 செ.மீ., மன்னார்குடி, காரைக்காலில் 11 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

அரியலூர், தரங்கம்பாடி, மதுக்கூர், நன்னிலம் 10 செ.மீ., செட்டிகுளம், திருவிடைமருதூர், பெரம்பலூர், தொழுதூர் 9 செ.மீ., சின்னக்கல்லூர், திருவையாறு 8 செ.மீ., பட்டுக்கோட்டை, வால்பாறை, அதிராம்பட்டினம், ஜெயங்கொண்டம், திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர், செந்துரையில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.

மயிலாடுதுறை, திருமானூர், ஸ்ரீமுஷ்ணம், பாபநாசம், லால்குடி, புள்ளம்பாடி, பெருங்களூர் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ. மழையும், வெம்பாவூர், சமயபுரம், பரங்கிப்பேட்டை, உளுந்தூர்பேட்டை, ஆடுதுறை, சேத்தியாத்தோப்பு, சாத்தூர், தஞ்சாவூர், சீர்காழி, கொள்ளிடம், அரூர், ஒரத்தநாடு ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் தவிர மற்ற இடங்களில் 1 செ.மீ. முதல் 3 செ.மீ. வரை மழை பெய்துள்ளது. #TNRains
Tags:    

Similar News