செய்திகள்
வீட்டின் சிலாப் இடிந்து விழுந்துள்ளதையும் உயிரிழந்த முத்துமுருகனையும் படத்தில் காணலாம்

சிவகங்கையில் கனமழை: கான்கிரீட் சிலாப் இடிந்து விழுந்து அரசு ஊழியர் பலி

Published On 2018-11-16 10:16 GMT   |   Update On 2018-11-16 10:16 GMT
கஜா புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வீட்டின் கான்கிரீட் சிலாப் இடிந்து விழுந்தததில் அரசு ஊழியர் பலியானார். #GajaCyclone
சிவகங்கை:

சிவகங்கை நகரில் உள்ள திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் முத்துமுருகன் (வயது 56). இவர் நெடுஞ்சாலைத்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

இன்று காலை முத்து முருகன் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். வீட்டின் அருகே வந்தபோது பக்கத்து வீட்டின் சிலாப்பு இடிந்து அவர் மீது விழுந்தது. தலையில் பலத்த காயமடைந்த முத்துமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இவருக்கு ராணி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

தகவலறிந்த சிவகங்கை நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். #GajaCyclone
Tags:    

Similar News