செய்திகள்

புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதில் புதிய வீடுகள்- அமைச்சர் காமராஜ்

Published On 2018-11-16 10:04 GMT   |   Update On 2018-11-16 10:04 GMT
திருவாரூரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதில் புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். #GajaCyclone #MinisterKamaraj
திருவாரூர்:

தமிழகத்தில் கஜா புயல் கரையை கடந்தபோது பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. 22 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8 மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


திருவாரூரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதில் புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். இம்மாவட்டத்தில் 5000 மின்கம்பங்களும், 28,500 மரங்களும் சாய்ந்துள்ளன. திருவாரூரில் 202 முகாம்களில் 1.16 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூரில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்ய உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.  #GajaCyclone #MinisterKamaraj
Tags:    

Similar News