செய்திகள்

காதல் திருமணம் செய்த 17 வயது சிறுமிக்கு குழந்தை இறந்து பிறந்தது- போலீசார் விசாரணை

Published On 2018-11-03 15:38 IST   |   Update On 2018-11-03 15:38:00 IST
வில்லியனூர் அருகே காதல் திருமணம் செய்த 17 வயது சிறுமிக்கு குழந்தை இறந்து பிறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

மரக்காணம் அருகே கீழ்பேட்டை துலுக்கானத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 22). இவரும், வில்லியனூர் அருகே உறுவையாறு காலனியை சேர்ந்த 17 வயது சிறுமியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

நிறை மாத கர்ப்பிணியான அந்த சிறுமிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அந்த சிறுமியை உறவினர்கள் ராஜீவ்காந்தி அரசு மகப்பேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். ஆனால், வழியிலேயே பிரசவம் ஏற்பட்டு குழந்தை இறந்து பிறந்தது.

பின்னர் அந்த சிறுமியை சிகிச்சைக்காக ஆஸ் பத்திரியில் சேர்த்தனர். அப்போது சிறுமிக்கு 17 வயதே நிரம்பி இருந்ததால் ஆஸ்பத்திரி நிர்வாகம் இதுபற்றி மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தது.

போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News