செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

Published On 2018-10-29 05:41 GMT   |   Update On 2018-10-29 05:41 GMT
வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 4 நாட்கள் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டனர். #Nutritionstaff

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 4 நாட்கள் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டனர்.

இதில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 3 ஆயிரம் சத்துணவு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பள்ளிகளில் சத்துணவு சமைக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.சமையல் உதவியாளர்கள், குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள், மகளிர் குழுக்கள் மூலம் சத்துணவு சமைக்கப்பட்டது. போராட்டத்தால் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் பாதிப்பு ஏற்பட வில்லை என சத்துணவு திட்ட அதிகாரிகள் கூறினர்.

இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலும் சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் பாதிப்பு இல்லாதவாறு அதிகாரிகள் மாற்று நடவடிக்கை எடுத்துள்ளனர். #Nutritionstaff

Tags:    

Similar News