செய்திகள்

ஊத்தங்கரை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி

Published On 2018-10-20 06:16 GMT   |   Update On 2018-10-20 06:16 GMT
ஊத்தங்கரை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

ஊத்தங்கரை:

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் நந்தகோபால். இவர் தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு கிருஷ்ண பிரசாத் (வயது 21) என்ற மகன் உள்ளனர். இவர் தனியார் பொறியியல் கல்லூரி 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று நந்தகோபால், அவரது மனைவி சாந்தி, மகன் கிருஷ்ணபிரசாத் ஆகிய 3 பேரும் ஒரு காரில் பெங்களூருவில் இருந்து விழுப்புரத்துக்கு உறவினர் திருமணம் நிகழ்ச்சிக்காக கலந்து கொள்வதற்காக சென்றனர்.

காரை நந்தகோபால் ஓட்டிவந்தார். அப்போது கார் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மூக்கானூர் என்ற பகுதிக்கு வந்தபோது வண்டி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அருகே இருந்த பள்ளத்தில கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பள்ளத்தில் கவிழுந்த காரில் இருந்த 3பேரையும் மீட்டனர்.

விபத்தில் கிருஷ்ண பிரசாத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற 2 பேருக்கும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். காயம் அடைந்த கிருஷ்ணபிரசாத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து மத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் உடனே தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து கிருஷ்ணபிரசாத் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் கிருஷ்ண பிரசாத் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #accident

Tags:    

Similar News