செய்திகள்

அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் மோதியதில் கண்டெய்னர் விழுந்து முதியவர் பலி

Published On 2018-10-02 08:55 GMT   |   Update On 2018-10-02 08:55 GMT
அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் மோதியதில் கண்டெய்னர் விழுந்து முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.#accident

அம்பத்தூர்:

அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் இன்று காலை 16 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலில் ஜல்லிகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக சரக்கு ரெயில் பின்னோக்கி சென்றது.

திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வழியில் உள்ள ரெயில்வே கேட் அருகில் ரெயில்வே ஊழியர்கள் பயன்படுத்த நிற்க வைக்கப்பட்டு இருந்த கண்டெய்னர் மீது ரெயில் மோதியது.

மோதிய வேகத்தில் கண்டெய்னர் கவிழ்ந்து விழுந்ததில் அருகே அமர்ந்து இருந்த அம்பத்தூர் இந்திராகாந்தி நகரை சேர்ந்த மணி (70) என்ற முதியவர் உடல் நசுங்கி உயிர் இழந்தார். ரெயிலை கண்டெய்னர் பெட்டி தடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த சரக்கு ரெயிலில் என்ஜின்கள் பொருத்தப்படாத நிலையில் சரக்கு ரெயில் எப்படி பின்னோக்கி வந்தது என்பது தெரியவில்லை.

மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடந்து செல்லும் பாதையில் இன்று விடுமுறை நாள் என்பதால் பெரும் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று பொது மக்கள் தெரிவித்தனர்.

விபத்து குறித்து ஆவடி ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #accident

Tags:    

Similar News